Dee Jae's doodles
Dee Jae’s Doodles are nothing but unscripted, unedited and unfiltered thoughts / certain memories / experiences... with a loud sharing!!
These could be about anything under the sky and / or as influenced by someone or something at sometime; as I felt or something that grabbed my attention and touched my heart ❤️!!!
சில ஆரம்ப வரிகள்!!
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மனதில் உதித்த, உறுத்திய சில எண்ணங்களை. “நினைத்தேன் .. எழுதுகிறேன்” “திரும்பிப் பார்க்கிறேன்” என்று வாட்ஸ்அப் மூலம் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது எதிர்பாராத பாராட்டுகள்.. எழுத்து நடை நன்று… தொடர்ந்து எழுதுங்கள்… சினிமா, இட்லி மட்டுமன்றி மற்றது பற்றியும் (இதன் அர்த்தம் – உருப்படியாக ஏதாவது!!) எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தியவர்கள் அனேகம்!! இதற்கிடையே ஒரு சிலரின் “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை” என்னும் மைண்ட் வாய்ஸும் எனக்கு கேட்டது…. அவர்களுக்கான தாழ்மையானபதில்…. “Train to Pakistan” புகழ் குஷ்வந்த் சிங் அவர்களிடம் ஒருமுறை, “உங்களை எழுத தூண்டியது எந்த மாபெரும் எழுத்தாளரின் எழுத்துக்கள்??” என்று கேட்ட போது, குஷ்வந்த் சிங் அவர்கள் சிரித்துக் கொண்டே கூறிய ஒரு பதில்….. “என்னை எழுத தூண்டியது எந்த ஒரு மாபெரும் எழுத்தாளரின் எழுத்தும் அல்ல… வெகு சில அமெச்சூர் எழுத்தாளர்களின் எழுத்துக்களே என்னை எழுத தூண்டியது….
இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை பத்திரிகைகளில் படித்த போது… இவர்கள் எழுதியதெல்லாம் பத்திரிகைகளில் வரும் போது… நாமும் ஏன் எழுதக்கூடாது?? என்று என்னை தூண்டியது..”!!
குஷவந்த் சிங் அவர்களின் இந்த பதில் தான் என்னையும் சற்று சிந்திக்கவும் எழுதவும் தூண்டியது…. என்று பொய் சொல்ல மனம் வரவில்லை…!! ஏதோ மனதை தொட்ட சில தருணங்களையும் எண்ணங்களில் உதித்தவைகளையும் பார்த்ததில் கேட்டதில் படித்ததில் பல பிடித்தவைகளையும் சில பாதித்தவைகளையும் எழுத்துக்களில் பதித்து வைக்கும் ஒரு முயற்சி!!
அவ்ளோதாங்க!!

